சென்னை மேயர் தேர்தல் மறைமுக தேர்தலாக நடைபெறும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
மருத்துவத்தவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டையில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பப்படுவோரிடமிருந்து மனுக்களை இன்று பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மா.சுப்பிரமணியன்,
கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி, திமுக மகத்தான வெற்றி பெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருப்பதையொட்டி விருப்ப மனு கட்சி சார்பாக பெறப்படுகிறது, அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 56 மாநகராட்சி வார்டுகளுக்கும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது, இது வரை 600 க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்று சென்றுள்ளதாக கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மற்றம் செய்தால் கூட தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்லக் வாய்ப்பு உள்ளது, இதனால் தேர்தல் நடத்த காலதாமதம் ஆகும்.
எனவே 2019 ல் அதிமுக ஆட்சியில் பொது வார்டு, பெண் வார்டு , ஆதிதிராவிடர் வார்டு என சென்னை மாநகராட்சிக்கு வரன் முறை படுத்திய படியே இந்த மறை தேர்தல் நடைபெறும் என்றார். மேலும் அதிமுக தேர்தலை தள்ளிப் போட மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் மறை முக தேர்தல் என மாறி மாறி கூறினார்.
*கடைசியாக அதிமுக மேயர் பதவிக்கு சொன்னது மறைமுக தேர்தல் அதன் படியே இன்முறை மேயர் தேர்தல் மறைமுகமாக நடைபெறும் என்றார்*
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு வன்மையாக கண்டிக்கதக்கது. திமுகவின் கொள்கை ஐஐடி நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும். தெரிந்தும் தமிழ்தாய் வாழ்த்தை புறக்கணித்தது ஏற்றுக்கொள்ள தகுந்தது இல்லைஇது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றார்.
ஜெய்பீம் திரைப்படம் நல்ல படம். இதற்கு டிவிட்டரில் நான் தெரிவித்த கருத்துக்கு நடிகர் சூர்யாவும் நன்றி தெரிவித்து பதிலளித்தார். ஆகையால் இந்த படம் குறித்து இதற்கு மேல் பேச வேண்டியதில்லை என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu