/* */

மும்பையிலிருந்து 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி சென்னை வந்தது

மும்பையில் இருந்து மேலும் 1.2 லட்சம் டோஸ் கேபாக்சீன் தடுப்பூசி சென்னைக்கு வந்தது.

HIGHLIGHTS

மும்பையிலிருந்து 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி சென்னை வந்தது
X

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த,பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு ஒதுக்காததால்,தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு,மத்திய அரசை வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகளை இன்று தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு,இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மதியம் சென்னை விமானநிலையம் வந்தது.10 பாா்சல்களில் வந்த 290 கிலோ எடையுடைய அந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமானநிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.

அதன்பின்பு குளிா்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.நாளை இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

Updated On: 16 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?