50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கல்

50 ஆயிரம்  தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கல்
X

பைல் படம்

சென்னை ராயப்பேட்டையில் 50 ஆயிரம் அமைப்புசாரா தோழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 50 ஆயிரம் அமைப்புசாரா தோழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விழாவில், 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதி செய்துள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 10,69,86,950 தொகைக்கான திருமணம், கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஓய்வூதிய நிலுவைத்தொகையாக 24,09,02,000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 34,78,88,950 ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார் தொழிலாளர் நல துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!