ராயபுரம் : கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை ஐடிரீம் மூர்த்தி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

ராயபுரம் : கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை ஐடிரீம் மூர்த்தி எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
X

ராயபுரத்தில்  கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை  தொடங்கி வைத்த ஐடிரீம் மூர்த்தி எம்.எல்.ஏ 

ராயபுரத்தில் கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை எம்எல்ஏ ஐடிரீம் மூர்த்தி தொடங்வைத்தார்.

ராயபுரம் குடிநீர் வாரியம் கழிவுநீர் அமைப்பு பராமரிப்பிற்கான பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதி-5ல் கழிவுநீர் கசடுகள் மிகுதியாக சேரும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள தெருக்களின் கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாரி பராமரிக்கும் பணியை வட்டம்-50, எம்.எஸ்.கோயில் தெருவில் இன்று இராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.ஐடிரீம் மூர்த்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி பணியை பார்வையிட்டார்.

இப்பணியின் போது ராயபுரம் பகுதிக்கும் உட்பட்ட 50 தெருக்களில் அமைந்துள்ள கழிவுநீர் அமைப்புகளில் சேரும் கசடுகள் பெருமளவில் அகற்றப்படவுள்ளது.

இப்பணிக்காக 29 தூர்வாரும் இயந்திரங்கள், 15 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 6 அதிவேக கழிவுநீர் உறிந்தும் இயந்திரங்கள் 1 மிதவேக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரம் ஆக மொத்தம் 51 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்