சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பை டி.ஜி.பி ஏற்பதாக தகவல்

சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பை டி.ஜி.பி ஏற்பதாக தகவல்
X

போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை மாநகர காவல் ஆணையர் கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு கவனித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர காவல்துறையின் பொறுப்புகளை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக சேர்த்து கவனித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அவரிடமே தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!