மே 25 முதல் இ-பதிவு முறையில் தளர்வுகள்..? தமிழக அரசு விளக்கம்

மே 25 முதல் இ-பதிவு முறையில் தளர்வுகள்..? தமிழக அரசு விளக்கம்
X
தமிழகத்தில் இ -பதிவு முறையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ- பதிவில் சில மாற்றங்கள் குறித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள், இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. தொழிற்சாலைகளில் வாகனங்கள் இ பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரை அழைத்துச் செல்ல இ -பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரு சக்கரவாகனங்களைப் பயன்படுத்தாமல், 4 சக்கர வாகனங்களை நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கின்ற ஆலைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா