சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் இன்று திறப்பு

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் இன்று திறப்பு
X

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கருணாநிதி திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில், பேரவைத் தலைவர் அப்பாடு வரவேற்று பேசினார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவர் விவரித்தார்.

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, கருணாநிதியின் முழு உருவப் படத்தைக் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்.

இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

மேலும், அமைச்சர்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, அரசு கொறடா, கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future