கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது ? அமைச்சர் பரபரப்பு பேட்டி

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  எப்போது ?  அமைச்சர் பரபரப்பு பேட்டி
X

சென்னையில் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேரக்கை எப்போது என்பது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, கல்லூரியின் அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரியின் உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

மாநிலம் முழுவதும் உள்ள வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக யாரேனும் கோரிக்கை வைத்தால் அதை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றும் கூறினார்.

மேலும், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் தொடங்கும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு