மக்களை தேடி வரும் மருத்துவ திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்
பைல் படம்.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
அதேபோல் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலை உள்ளது. புற்றுநோய் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நோயாளிகளில் பலர் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் பரிதபமாக இறக்கிறார்கள்.
இந்த மாதிரி நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீடு வீடாக சென்று மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவது, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்தல், பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் பிசியோதெரபிஸ்டுகள் வீடுகளுக்கு நேரடியாக அளிக்கப்பட இருக்கிறது.இத்திட்டத்தினை ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu