பெரம்பூர் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

பெரம்பூர் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி கதிரவன்.

பெரம்பூர் பகுதியில் டிம்கி கொடுத்து சுற்றி திரிந்த பிரபல ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த கதிர் என்கின்ற கதிரவன் .( 28) இவன் மீது செம்பியம், ஓட்டேரி, வில்லிவாக்கம், உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்கு மற்றும் ஆள் கடத்தல், வழிப்பறி, கொலை முயற்சி, போன்ற 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளத

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்து வருவதாக செம்பியம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் செம்பியம் போலீசார் கதிர் என்கின்ற ரவுடி கதிரவனை செம்பியம் போலீசார் தேடிவந்தனர். இருந்த போது டிம்கி கொடுத்து வந்த ரவுடியை தனிப்படை அமைத்து கதிரவனை கைது செய்தனர்

பின்னர் செம்பியம் போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு இவர் மீது குண்டார் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
future ai robot technology