வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளை; மர்ம ஆசாமிகளுக்கு வலை

வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளை; மர்ம ஆசாமிகளுக்கு  வலை
X
சென்னை வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி மெகிசின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர், சென்னை மாவட்ட கலெக்டரிடம், தபேதராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 30ஆம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலை, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்; உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் தங்க நகைகள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றன. கைரேகை நிபுணர்களை வரவழைத்து, திருடர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்து, பழைய திருடர்களின் கைரேகை ஒத்துப் போகிறதா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story