ஜிகா வைரஸ்..! தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகஅரசு புதிய உத்தரவு

ஜிகா வைரஸ்..!  தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகஅரசு புதிய உத்தரவு
X
தமிழகம் முழுவதும் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை: தமிழகம் முழுவதும் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் மற்றும் டெங்கு வைரஸை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மைப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai based healthcare startups in india