சென்னையில் முகக்கவசம் அணியாத 842 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னையில் முகக்கவசம் அணியாத 842 பேர்  மீது வழக்குப் பதிவு
X

சென்னை மாநகர போலீசார் தீவிர வாகன சோதனை ( பைல் படம்)

சென்னையில் முகக்கவசம் அணியாத 842 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 30 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 287 இருசக்கர வாகனங்கள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகு ரக வாகனம் என மொத்தம் 299 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 842 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!