சென்னையில் 179 காவலர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்

சென்னையில் 179 காவலர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்
X

பைல் படம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் சென்னையில் 179 காவலர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் சென்னையில் 179 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் நடத்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தற்போது சென்னையில் மீண்டும் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னர் இதே போல சென்னை முழுவதும் 277 காவல் ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பொதுவாக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் தேர்தலுக்கு வேறு காவல்நிலையத்திற்கு மாற்றப்படுவார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே இது குறித்த பட்டியல்கள் தயாராகிவிடும். கடந்த முறை அறிவிக்கப்பட்ட பணி இட மாறுதல்கள் அவரசகதியில் அறிவிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் சிறு சிறு விமர்சனங்கள் மேலெழுந்தது.

இதனையடுத்து தேர்தலுக்கு பின்னர் அதிரடியாக தற்போது 179 காவல் ஆணையர்களின் பணியிட மாற்றம் சென்னை கமிஷ்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய காவல்நிலையங்களான எழும்பூர், மாம்பலம், கீழ்பாக்கம் உள்ளிட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள் உட்பட பல ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!