துபாய் விமானத்தில் வந்த பயணி திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு

துபாய் விமானத்தில் வந்த பயணி திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு
X

மாதிரி படம் 

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடுவானில் உயிரிழந்தார்

துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் 117 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.அந்த விமானத்தில் நாகப்பட்டிணத்தை சோ்ந்த மதா்ஸா பஷீா் (47) என்பவா் வந்து கொண்டிருந்தாா். விமானம் சென்னையை நெருங்கி கொண்டிருந்தபோது,அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தாா்.

இதையடுத்து விமானப்பணிப்பெண்கள் அவருக்கு அவசர முதலுதவி செய்ததோடு, விமானிக்கும் தகவல் கொடுத்தனா். உடனடியாக விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு,தகவலை கூறி, மருத்துவகுழுவை சென்னை விமானநிலையத்தில் தயாா்நிலையில் இருக்கும்படி கூறினாா்.

அந்த விமானம் இன்று காலை 4.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனா். ஆனால் பயணி மதா்ஸா பஷீா் விமான சீட்டில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் இருந்தாா். இதையடுத்து அவா் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனா். இதனால் விமானத்திலிருந்த சக பயணிகளும், விமான ஊழியா்களும் சோகமடைந்தனா்.

இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் விரைந்து வந்து, உயிரிழந்த பயணியின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.அதோடு நாகப்பட்டிணத்தில் உள்ள பயணியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்த விமானம் வழக்கமாக அதிகாலை 4,30 மணிக்கு வந்துவிட்டு,மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும். ஆனால் பயணி ஒருவா் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பு, தாமதமாக இன்று காலை 7 மணிக்கு துபாய்க்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்