சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
X

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

2019-ஆம் ஆண்டே சென்னை திருச்சி நெடுஞ்சாலை பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தகாலம் முடிந்து விட்ட நிலையில் இன்னமும் அந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை நியாயமானதாக இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி