சென்னை சாலைகளில் தலைவர்கள் பெயர் மாற்றம்

சென்னை சாலைகளில் தலைவர்கள் பெயர் மாற்றம்
X
-தலைமைச் செயலரிடம் திமுக மனு.

சென்னையில் பெரியார் ஈவேரா சாலை பெயர் மாற்றம், அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம் சாலை பெயர் மாற்ற முடிவு ஆகியவற்றை நிறுத்தக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் தலைமைச் செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ மூவரும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்து கடிதத்தை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். மற்ற மாநிலங்களில் அங்குள்ள தலைவர்கள் பெயர்கள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அண்ணா, பெரியார், காமராஜர் பெயர் ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகிறது'. இதை மாற்றும் உத்தரவு யாருடைய தூண்டுதலின்பேரில் யாரை திருப்திபடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது