பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கு; திரும்பப்பெற ஸ்டாலின் உத்தரவு

பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கு; திரும்பப்பெற ஸ்டாலின் உத்தரவு
X

பைல் படம்

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் 90 பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 பேர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!