சென்னை டிஜிபி அலுவலகத்தில் பனங்காட்டு படை கட்சியினர் புகார்

சென்னை  டிஜிபி அலுவலகத்தில் பனங்காட்டு படை கட்சியினர் புகார்
X
பைல் படம்
பனங்காட்டு படை கட்சியினர் சென்னை மைலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்

சென்னை மைலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பனங்காட்டு படை கட்சியின் சென்னை மண்டல தலைவர் சுந்தர் சிங் மலேசியாவை சார்ந்த தனலட்சுமி என்பவர் மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுயதாவது :

எங்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் என்பவரை கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்போது கட்சியிலிருந்து நீக்கிவிட்டது .

இந்நிலையில் ஹரி நாடார் உடன் தொடர்பில் இருந்த மலேசியாவை சார்ந்த தனலட்சுமி என்பவர் தொடர்ந்து பல மாதங்களாக எங்கள் பணங்காட்டு கட்சியையும் கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா அவர்களையும் மற்றும் கட்சியில் செயல்படும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் சமூக வலைதளங்களில் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக மிரட்டலும் விடுத்து வருகிறார்.

இது பனங்காட்டு படை கட்சியினர் இடையே அசாதரண சூழலை ஏற்படுத்துகிறது எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்த வேண்டும் என காவல் இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!