சென்னை முக்கிய பகுதிகளுக்கு 7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னை முக்கிய பகுதிகளுக்கு  7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!
X
சென்னையின் முக்கிய பகுதிகளில் 7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கியமான இடங்களில் 7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.

இதன் அடிப்படையில், ஏஎஸ்பியாக இருந்த கார்த்திகேயன் மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவருக்கும் சென்னையில் துணை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கார்த்திகேயன் கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பிரதீப் குமார் பெருநகர போக்குவரத்து காவல்துறையின் வடக்கு பிரிவிற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர சென்னையில் நியமிக்கப்பட்டுள்ள மற்ற புதிய துணை ஆணையர்கள் திஷா மிட்டல் (மயிலாப்பூர்), சிவ பிரசாத் (வண்ணாரப்பேட்டை), இ.சுந்தரவதனம் (மாதவரம்), தீபக் காங்கியர் (அண்ணாநகர்), என்.குமார் (சென்னை போக்குவரத்து தெற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தற்போது சென்னையில் உள்ள 12 துணை ஆணையர் பதவிகளில் 9 பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர்.மீதமுள்ள மூவரும் தமிழ்நாடு குரூப் 1 மூலம் தேர்வாகி பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!