அதிமுக: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா நியமனம் 15 பேர் நீக்கம்

அதிமுக: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா நியமனம் 15 பேர் நீக்கம்
X

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, கொறடாவாக தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மாஜி அமைச்சர் ஆனந்தன், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் எம்.பி., சின்னசாமி உள்பட 15 பேரை கட்சியில் இருந்து நீக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்