தமிழக மக்களுக்கு எனது சேவை தொடரும் : ஓய்வு டிஜிபி திரிபாதி

தமிழக மக்களுக்கு எனது சேவை தொடரும் : ஓய்வு டிஜிபி திரிபாதி
X

ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதிக்கு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை.

தமிழக மக்களுக்கு எனது சேவை தொடரும் என்று ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.

பணி ஓய்வு நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜே.கே திரிபாதி பேசியதாவது:

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி-யாக பதவியேற்றுள்ள சைலேந்திர பாபு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

1985 ஆம் ஆண்டு தொடங்கிய எனது காவல்துறை பணியை 36 ஆண்டுகாலம் சிறப்பாக ஆற்றி இன்று ஓய்வு பெறுகிறேன்.எனக்கு காவல் பணியில் இந்த பெருமையை வழங்கிய தமிழக அரசுக்கும், உடன் பணியாற்றிய அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஓய்வு நாளில் சிறப்பாக அணிவகுப்பு மரியாதை அளித்த காவல்துறையினருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே எனது சொந்த மண்ணாக நினைக்கிறேன். பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக மக்களுக்கு எனது சேவையை தொடர்ந்து ஆற்றுவேன். ,இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!