வெள்ளை அறிக்கை வெளியிட மோடி தயாரா? -கே.எஸ்.அழகிரி

வெள்ளை அறிக்கை வெளியிட மோடி தயாரா? -கே.எஸ்.அழகிரி
X

கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என கேஎஸ் அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி அரசுகள் படுதோல்வி அடைந்துள்ளது என குற்றசாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என விமர்சனம் செய்துள்ளார். 12 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது ஏற்புடையது அல்ல. தடுப்பூசி உற்பத்தி பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட மோடி தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!