கோயம்பேடு மார்க்கெட்டில் 85% பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர் பாபு.
சென்னை கோயம்பேட்டில், மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிபவர்களில் 85 சதவீதம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தவறு எங்கே நடைபெற்றாலும், நிச்சயமாக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். மதுரைக்கு சென்றிருந்தபோது பழமுதிர்ச்சோலைக்கு சொந்தமான 381 ஏக்கர் நிலத்தில் விளையும் பூக்களை, இறைவனுக்கு காணிக்கையாக்க வேண்டும் என்று ஜமீன்தாரர்கள் எழுதி வைத்து சென்றுள்ளனர். அந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அது மீட்கப்படும். குயின்ஸ் லேண்ட் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை, சட்டப் போராட்டம் நடத்தி மீட்க தேவையான பணிகளில் இந்து சமய அறநிலைத்துறை ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu