தேர்தலுக்கு முன்னரே தோற்றுப்போயுள்ள மோடி அரசு: கே பாலகிருஷ்ணன்

தேர்தலுக்கு முன்னரே தோற்றுப்போயுள்ள  மோடி அரசு: கே பாலகிருஷ்ணன்

கே பாலகிருஷ்ணன்

தேர்தலுக்கு முன்னரே தோற்று போயுள்ளோம் என்ற மோடி எண்ணத்தின் வெளிப்பாடே, வேளாண் சட்டத்தை பின் வாங்கும் அறிவிப்பு என, கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் மார்க்சிஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஓராண்டு காலம் சிறப்பாக நடைபெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு மோடி அரசு அடிபணிந்துள்ளது. இது, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தில் உயிரிழந்த 700-ம் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

இந்த போராட்டத்தின் வெற்றி, கார்ப்பரேட்களுக்கு கிடைத்த மரம அடி. இந்த சட்டத்தை விவசாயிகளுக்கு புரியவில்லை என மோடி கூறுவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்றதாகும். இப்போதும் இந்த சட்டத்தின் தீமைகளு குறித்து பிரதமர் மோடிக்கு புரியவில்லையே என்பது வருத்தமளிக்கிறது. தேர்தலுக்கு முன்னரே தோற்று போயுள்ளோம் என்ற மோடி எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த சட்டத்தை பின் வாங்கும் அறிவிப்பு.

பல்வேறு காப்ரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன். தமிழகத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story