சென்னையில் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 5 பேர் கும்பல் கைது
சென்னை பூக்கடை பகுதியில் கடையின் உரிமையாளரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பட்டாளம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கே எல் பி அபிநந்தன் பிளாக் முகவரியில் வசித்து வரும் மிக்காம்சந்த் மகன் ஸ்ரீபால் (/31.) நாராயண முதலி தெரு, சரிக்கா நிசரிகாம் பிளாக்கில் மகேந்திரா ரிப்பன் ஹவுஸ் என்ற கடையை நடத்தி வருகிறார்.
கடந்த 3.1.2022 .அன்று மாலை 5 மணி அளவில் சுமார் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த ஸ்ரீபாலை கத்தியால் தாக்கியதில் வலியை தாங்க முடியாமல் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தபோது, ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டனர். மேலும் அருகில் இருக்கக்கூடிய பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
பூக்கடை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் சி.சி.டி.வி . காட்சிகள் ஆய்வு செய்தனர் வீடியோ பதிவில் 2 இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மூலம் கண்டறிந்து ஸ்ரீபாலை தாக்கி பணத்தை பறிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் இருசக்கர வாகனங்களில் இருக்கும் பதிவு எண்களை வைத்து கொண்டு மர்ம நபர்கள் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது
இதையடுத்து முகமது ஆஷிக் ( 23 ), நேதாஜி நகர் 4வது தெரு அஜித் (22.) ஷயின்ஷா (22), விஜய் (22 ), அஜித்குமார்(21.) ஆகிய 5 பேரை கைது செய்து இரண்டு இருசக்கர வாகனங்கள் 3 கத்தி போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu