இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.
சோழவரம் அருகே வீட்டினருகே நின்று கொண்டிருந்த இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காரனோடை லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு 25. கூலி வேலை செய்து வந்த சரத்பாபு மீது திருட்டு உள்ளிட்ட சில வழக்குகள் சோழவரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்தபோது சரத்பாபுவிற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சரத்பாபு வீட்டின் வெளியே வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சரத்பாபுவை ஓட ஓட விரட்டியது. சற்று தொலைவில் அவர் ஓட முடியாமல் நிற்க, பைக்கில் வந்தவர்கள் சரத்பாபுவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் சரத்பாபு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சரத்பாபுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோழவரம் காவல்துறையினர் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஐந்து தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu