இளைஞர் வெட்டி படுகொலை: லாரி ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது

இளைஞர் வெட்டி படுகொலை: லாரி ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது

பைல் படம்

சோழவரம் அருகே இருசக்கர சக்கர வாகனத்தை சரி செய்து தருமாறு கேட்ட விவகாரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டி படுகொலை செய்த லாரி ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, சோழவரம் அடுத்த ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட விஜிபி மேடு தீரன் சின்னமலை பகுதியில் வசித்து வருபவர் விஜி இவருக்கு வினோத் (வயது 24), தனுஷ் (வயது 22) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷ் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி கடந்த வாரம் தனுஷ் தனது அண்ணன் வினோத்துடன் இருவரும் இருசக்கர வாகனத்தின் மீது சோழவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர் திசையில் அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் ஊட்டி வந்த வந்த லாரி இருசக்கர வாகனம் மீது உரசியதில் சேதமடைந்தது. இதனால் தனுஷ்- குமாருக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் லாரி ஓட்டுனர் குமார் இருசக்கர வாகனத்தை ஒரு வாரத்திற்குள் சரி செய்து தருகிறேன் என கூறி சென்ற நிலையில் ஒரு வாரம் ஆகியும் இருசக்கர வாகனத்தை சரி செய்து தராததால் தனுஷுக்கும் குமாருக்கும் போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த குமார் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் தனுஷ் வீட்டிற்கு நேரில் சென்று தனுஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் குமார் மறுத்து வைத்திருந்த அறிவாளால் தனுஷை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்துவிட்டு தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்ட தனுஷின் நண்பன் சீனு என்பவர் தடுக்க சென்ற போது அவருக்கு பலத்தை வெட்டு காயம் ஏற்பட்டது. அங்கிருந்து மின்னல் வேகத்தில் குற்றவாளிகள் தப்பி சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவரம் போலீசார் உயிரிழந்து கிடந்த தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதில் படுகாயம் அடைந்த சீனுவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளே தேடி வந்த நிலையில் ஆத்தூர் கிராமம் அருகில் உள்ள கொசத்தலை ஆற்றுப்பகுதியில் மருந்திருந்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் (குமார் வயது 30), (மணிகண்டன் வயது 34), (கார்த்திக் வயது 25), (ஐயப்பன் வயது 30), செங்குன்றம் அருகே பன்னீர்வாக்கம் கிராமத்தை சேர்ந்த (சந்தோஷ் வயது 19), (மோகன் குமார் வயது 26) ஆகிய ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story