மாதவரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த கறவை மாடுகள் திருடிய இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட சந்தோஷ்.
சென்னை கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரது மூன்று கறவை மாடுகள் அதே பகுதியில் உள்ள புல் பண்ணையில் மேய விட்டுள்ளார். அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை திடீரென காணவில்லை. இதுகுறித்து கௌசல்யா கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் இரண்டு மாடுகள் காணாமல் போனதாக புகார் செய்தார்.
புகாரின்பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மணலி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் என்பவரின் மகன் சூர்யா (வயது 24 )கொடுங்கையூர் ஆண்டி மடம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ் (வயது 19) ஆகிய இருவரும் 5 மாடுகளை திருடி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டு மாடுகளை வாங்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu