சென்னை தண்டையார் பேட்டையில் யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை தண்டையார் பேட்டையில் யோகா  ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
X

போக்சோவில்  கைதான யோகா ஆசிரியர்.

சென்னை தண்டையார் பேட்டையில் யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா மாஸ்டராக பணிபுரியும் சந்தானம் (வயது 57) என்பவர் பள்ளி மாணவிகளை அவ்வப்போது தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் யோகாசன வகுப்பு என்ற பெயரில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவது மற்றும் மாணவிகளுக்கு பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆபாசமாக திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பள்ளியில் பயிலும் 9வது 10வது மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் குழந்தைகள் நல வாரிய குழுவில் புகார் அளித்தனர்

இதனடிப்படையில் குழந்தைகள் நல வாரிய குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு யோகா மாஸ்டர் சந்தானத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!