செயின்ட் மேரீஸ் பள்ளி சார்பில் மகளிர் தின பேரணி

செயின்ட் மேரீஸ் பள்ளி சார்பில் மகளிர் தின பேரணி
X

செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி. 

செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை போலீஸ் ஆய்வாளர் ஜெகநாதன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி பள்ளி முதல்வர் சூசன் ஆபிரகாம் தலைமையில் நேற்று நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் பலராமன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பேரணியை கொடி அசைத்து வைத்து துவக்கி வைத்தார்.

இதில் செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பிராஜ், ராஜசேகரன், கண்ணன் நிருபர் ஸ்மைல் ரஞ்சித், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் ஆசிரியர் நண்பன் எம்.அபூபக்கர் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இப்பேரணி செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை பகுதியில் தொடங்கி செங்குன்றம் காவல் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகளின் பெண்ணுரிமை, சாதனை பெண்களின் பட்டியல் உள்ளிட்ட பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future