எங்கே போனது கொரோனா..? மக்கள் கூட்டத்தில் ஸ்தம்பித்தது காசிமேடு

எங்கே போனது கொரோனா..? மக்கள் கூட்டத்தில் ஸ்தம்பித்தது காசிமேடு
X

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது இறைச்சிக் கடைகள் திறக்கப்படாது எனவும் சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமையான இன்று (ஏப்.30) சென்னை, காசிமேட்டில் மீன் வாங்குவதற்காகப் பொதுமக்கள் குவிந்தனர். மீன்களை வாங்குவதற்காக பலரும் தனி மனித இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணியாமலும் வந்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவுரை வழங்கினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!