அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
புள்ளிலையன் ஊராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னை செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சுதர்சனம் வழிகாட்டுதலின்படி புழல் ஒன்றிய செயலாளர் பெ.சரவணன் தலைமையில் அவைத்தலைவர் செல்வமணி,புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் மற்றும் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில், மாவட்டப் பிரதிநிதி மூ.ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் ஏற்பாட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு புத்தாடை, எழுது பலகை, நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் இனிப்புகள் வழங்கியும், பொது மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், ஜனார்த்தனன், சதீஷ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் டில்லி, மாவட்ட தொண்டரணி தலைவர் முருகன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாதவன் மற்றும் திலீப், சரவணன், செல்வம், சாக்ரடீஸ், மந்திரமூர்த்தி, பாஸ்கரன், வரதன், பத்மநாபன்,அரிபிரபா, யோகேஷ், பார்த்திபன், விக்னேஷ், திவாகர், பாண்டியன், அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu