கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
X

திருஞானம்

கொடுங்கையூரில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் அடுத்த கொடுங்கையூர் ஜம்புலிங்கம் காலனியில் கடந்த ஆறு மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் திருஞானம் (வயது 40). வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

மேலும் இவர் விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் கார்கள் சுத்தம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இந்த நிலையில் கொடுங்கையூர் ஜம்புலிங்கம் நியூ காலனி தாமோதரன் தெருவில் ஒரு வீட்டில் கார் சுத்தம் செய்ய சென்றபோது சாலையில் மின்சார வயர் அறுந்து தொங்குவதை பார்த்து அகற்றச் சென்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த மனைவி சரஸ்வதி கூச்சலிடவே உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!