மாதவரம் அருகே பெண்களுக்கான கைவினை பொருட்கள் தொழில் பயிற்சி முகாம்

மாதவரம் அருகே பெண்களுக்கான கைவினை பொருட்கள் தொழில் பயிற்சி முகாம்
X

வெள்ளானுர் ஊராட்சி லட்சுமி நகரில் நடைபெற்ற பெண்களுக்கான தொழிற் பயிற்சி முகாம்.

சென்னை, மாதவரம் அருகே பெண்களுக்கான கைவினை பொருட்கள் தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சென்னை, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானுர் ஊராட்சி லட்சுமி நகரில் இந்திய அரசு இளைஞர் நலன் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நேரு யுவகேந்த்ரா மற்றும் பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சி குழு இனைந்து பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பயிற்சியாளர் சங்கர்கணேஷ் ஏற்பாட்டில் பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சி குழு செயலாளர் பகவதிசந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வெள்ளானுர் ஊராட்சி மன்ற உறுப்பினர் திருநாவுகரசு கலந்துகொண்டு பெண்களுக்கு இலவச கைவினை பொருட்கள் தொழில் பயிற்சி முகாமை துவங்கி வைத்தார். இதில் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா