தொழிற்சாலை இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு தருவதாக ஏமாற்றிய இருவர் கைது
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர்
தொழிற்சாலையில் குறைந்த விலைக்கு இரும்புக் கழிவுகளை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 25 லட்சம் ஏமாற்றிய து தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்(48).இவர் வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு பழக்கமான சுகுமார் என்பவர் இருங்காடுகோட்டை பகுதியை சேர்ந்த ஜானகிராமன்(50) ஆகிய இருவரும் சேர்ந்து காட்ரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு பொருட்களை குறைந்த விலைக்கு எடுத்து தருவதாக ஆசை வார்த்தை கூறி வினோத்திடமிருந்து ₹.25 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கழிவு பொருட்களை எடுத்து தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இது குறித்து வினோத் பலமுறை கேட்ட போது ஒரு மாதம் கழித்து எடுத்து தருகிறோம் என்று அலைக்கழித்து வந்துள்ளனர். பின்னர் இதுக்குறித்து பாதிக்கப்பட்ட நபர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த சுகுமாரன், ஸ்ரீபெரும்புதூர் காட்றம்பாக்கம் பகுதியில் சேர்ந்த ஜானகிராமன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu