/* */

கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்

கோயம்பேட்டில் இளநீர் ஏற்றி வந்த லாரியை கடத்திய சம்பவத்தில் 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
X

கைது செய்யப்பட்டவர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகன் நாத்( வயது 45), தினமும் மைசூரில் இருந்து இளநீரை லாரியில் ஏற்றிக் கொண்டு கோயம்பேடு மற்றும் சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இறக்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மைசூரில் இருந்து இளநீரை ஏற்றிக்கொண்டு கிளம்பியவர் கோயம்பேடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இளநீரை இறக்கிவிட்டு கோயம்பேடு,100 அடி சாலை அருகே வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு டீ.குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் இளநீர் ஏற்றி வந்த லாரியில் சாவியுடன் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை திருடி கொண்டு சென்றார்.

இதனைக் கண்டதும் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடிக்க முடியாததால் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லாரியை கடத்தி செல்வதாகவும், அந்த வாகனத்தின் நம்பரை அளித்தனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் கொரட்டூர் பகுதியில் வந்த வாகனத்தை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது லாரியை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் கோயம்பேட்டில் இருந்து திருடப்பட்ட லாரி என்பது தெரியவந்ததையடுத்து, லாரியையும் லாரியை திருடி வந்த நபரையும் கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் லாரியை கடத்தி சென்றது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அருள்( வயது 38), என்பது தெரியவந்தது இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், திருடி செல்லப்பட்ட லாரியையும் மீட்டு லாரியை மீட்டு இவர் மீது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிக்கும் நேரத்தில் இளநீர் ஏற்றி வந்த லாரியை திருடிச் சென்ற சம்பவத்தில் இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 27 April 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...