செங்குன்றத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி

செங்குன்றத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி
X

வியாபாரிகள் மௌன ஊர்வலம்.

தமிழ்நாடு வணிகர் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மறைவிற்கு செங்குன்றம் சுற்று வட்டார வியாபாரிகள் கடைகளை அடைத்து அஞ்சலி மௌன ஊர்வலம் நடத்தினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் வயது முதிர்வு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு தமிழகம் முழுவதும் வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கங்களின் சார்பாக அகிலன் தலைமையில் காமராஜர் சிலையில் தொடங்கி நேதாஜி சிலை வரை மௌன அஞ்சலி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், டில்லிபாபு ஆகியோர் ஊர்வலத்தை ஒருங்கிணைத்திருந்தனர். செங்குன்றம் தெற்கு அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் லட்சுமி நாராயணன், செயலாளர் அப்துல் லத்தீப், பொருளாளர் யுவராஜ், செங்குன்றம் வடக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் லோகநாதன், செயலாளர் சிற்றம்பலம், பொருளாளர் மிஸ்ரிலால், பாலவாயில் வியாபாரிகள் சங்கத் தலைவர் அழகேசன், செயலாளர் வீரமணி, பொருளாளர் சின்னத்துரை, நாரவாரிக்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்பாதுரை, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் லட்சுமணப் பெருமாள் உள்ளிட்ட வியாபாரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ai solutions for small business