திருவள்ளூர்: ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் நடை பெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், துணைத்தலைவர் அணிதாகுமாரிசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டு 2022-2023-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணவு பேரணியை துவக்கி வைத்தனர். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி முதல் வடகரை ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே தீவிர விழிப்புணவு ஏற்படுத்தினர்.
இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்.சம்பத், நாராயணசாமி, வழக்கறிஞர் டில்லிபாபு, ஊராட்சி செயலர் உல்லாசம் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தனசேகர், கண்ணன், கோபி, சாமு, ஐய்யப்பன், சரத், குகன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu