தீர்த்தக்கிரியம்பட்டு கெங்கையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தீர்த்தக்கிரியம்பட்டு கெங்கையம்மன் கோவில் மஹா  கும்பாபிஷேக விழா
X

தீர்த்தக்கிரியம்பட்டு பாலவாயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் காேவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தீர்த்தக்கிரியம்பட்டு பாலவாயல் கிராமம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தீர்த்தக்கிரியம்பட்டு பாலவாயல் கிராமம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா

செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி பாலவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா கிராம பொதுமக்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோபூஜை, விக்னேஸ்வரபூஜை, தனபூஜை, தம்பதிபூஜை, நவகன்யாபூஜை, சுமங்கலி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பஞ்சலோகம் யந்தரம் வைத்து ப்ரதிஷ்டை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம் மற்றும் முதல் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இதணைத்தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கலசங்களை மேளதாளத்துடன் கோயிலை சுற்றி வளம்வந்து பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குட்டி சிவாசாரியார், முத்துக்குமார குருக்கள் ஆகியோர் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மூலவக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அலங்காரம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணதாசன், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், சமூக சேவகர்கள் ஜாபர்உசேன், கே.ஆர்.வெங்கடேசன், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன், புழல் ஒன்றிய குழு துணை சேர்மன் சாந்திபாஸ்கர் மற்றும் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் ஆலயம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா