பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்
X

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு,க.ஸ்டாலின்.

வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,தீர்மானம் நிரைவேற்றப்படும்

வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் துணைவேந்தர் நியமனம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு விரைவில் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்கும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்து கொள்ள வேண்டும் என்ற முடிவு என்பதே சிறப்பாக இருக்கும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறார். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்