கோயம்பேடு பஸ் நிலையம் அருகே செல்போன் பறித்தவர் 24 மணி நேரத்தில் கைது

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே செல்போன் பறித்தவர் 24 மணி நேரத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ்.

சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்தவரிடம் செல்போன் பறித்த நபரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கோயம்பேட்டில் செல்போன் பறிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பேருந்து நிலையத்தில் நின்றபோது செல்போனை பறித்த திருடனை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், ஆகோஜ் மகாராஜபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ரவிநாதன்.(வயது 24), சென்னையில் தங்கி கேட்டிரிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ரவிநாதனின் செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர். ரவிநாதன் பிறரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் ரவிநாதன் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை அடையாளம் கண்டனர். இதையடுத்து செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (24) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
why is ai important to the future