செங்குன்றம் ஆர் பி கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

செங்குன்றம் ஆர் பி கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
X

செங்குன்றம் ஆர்பி கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.நாகூர் மற்றும் நிர்வாகிகள்.

செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி லியோ கிளப், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து ஆசிரியர் தின விழா திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் முதல்வர் டாக்டர் மோ.மகாலட்சுமி, துணை முதல்வர் கீதா அரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.நாகூர் அனீஃபா, செயலாளர் எஸ்.ரமேஷ், நிர்வாகி நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், பாடியநல்லூர் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 19 ஆசிரிய பெருந்தகைகளுக்கு நல்லாசிரியர் விருது சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

சங்க நிர்வாகி நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் உரையாற்றும் பொழுது, ஆசிரியர்கள் தன்னுடைய மாணவ - மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மாணாக்கர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு ஆசிரியர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என அவர்களுக்கான 10 தனித் தனி தலைப்புகளில் எடுத்துக் கூறினார்.

அதே போல் மாணாக்கர்கள் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம், பெற்றோர்கள் -ஆசிரியர்களை மதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!