தி ஃபேமிலி மேன் தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: அமைச்சர் தகவல்

தி ஃபேமிலி மேன் தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் மனோ தங்கராஜ்

தி பேமிலி மேன் இணையதள தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்தொடர் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளை திரித்து கொச்சை படுத்துவதாகவும் உள்ளது.

மேலும் இது எந்த விதத்திலும் தமிழர் நலம் சார்ந்து இருக்காது என்பதால் இத்தொடரை தடை செய்ய தமிழக அரசு சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

இத்தொடரை ஒளிபரப்பாமல் முழுமையாக தடை செய்வதற்கு உரிய அதிகாரம் தமிழக அரசிற்கு இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தெரிவித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!