செங்குன்றம் அருகே புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ

செங்குன்றம் அருகே புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
X

புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்.

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் துவக்கி வைத்தார்.

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 மின் மாற்றிகள் துவக்க விழா ஆவடி செயற்பொறியாளர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே.கர்ணாகரன், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி டில்லி, உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கருணாநிதி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு புதிய மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஏ.காசிம்முகம்மது, துணைச் செயலாளர்கள் துரைவேல், சீனிவாசன், வீரம்மாள், பொருளாளர் அரசு, மாவட்ட பிரதிநிதிகள் விஜயன், சேகர், கோதண்டன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் சன்.முனியாண்டி, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் பரசுராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி துரைவேல் மாலதிமகேந்திரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!