ஹிட்லர், முசோலினியின் அவதாரம் தான் ஸ்டாலின் - ஜெயக்குமார் ஆவேசம்
நிரூபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஹிட்லர், முசோலினியின் அவதாரம் தான் ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு விமர்சித்துள்ளார். நீதிமன்றம் பிணையில் செல்ல உத்தரவிட்டும் கூட, நேற்று வெளியில் விடாமல் செய்த அரசு தான் திமுக அரசு எனவும், ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் கூட அதிமுக இயக்கத்தை அழிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். நேற்றே பிணையில் விட நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட நீதிமன்ற உத்தரவை மதிக்காத சிறைத்துறை நிர்வாகத்தின் நடவன குறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பிரமுகரை தாக்கியதாக கைதாகி, மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை ஆணை வழங்கியது. இதனையடுத்து நேற்று மாலை அவர் விடுவிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 6 மணியானதால் சிறைத்துறை விதிகளின்படி பிணையில் விடுவிக்க இயலாது என கூறப்பட்டதால், புழல் சிறையில் இருந்து இன்று ஜெயகுமார் வெளியே வந்தார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி மற்றும் ஏராளமான அதிமுகவினர் சிறை வளாகத்தில் குவிந்து, அவரை வழவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 20 நாட்கள் அனைவரையும் மிஸ் பண்ணிட்டதாகவும், திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை அழித்து விட வேண்டும், கழக முன்னோடிகள் மீது வழக்குகள் போட்டு அழித்து விடலாம் என்கின்ற கங்கனம் கட்டிக் கொண்டதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கு எதுவும் நல்லது செய்யாமல் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரே ஒரு வேலையாக எதிர்க்கட்சி ஒரு குறிப்பாக அதிமுக அழித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின், சேடிஸ்ட், பாசிஸ்ட் எனவும், ஹிட்லர் முஸோலினியின் மறுஉருவம் தான் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்தார்.
தம் மீத திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது எனவும், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் தம் மீது பொய் வழக்கு போடப்பட்டது எனவும், கள்ள ஓட்டு போடும் இந்த கேமராவில் பதிவாகியது, கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகர் மீது செயின் பறிப்பு, கொரோனா காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது என 14 வழக்குகள் உள்ளதாகவும்,அவர் அவர் திமுகவினர் என ஸ்டாலின் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழக முதல்வர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கடமையை செய்ய வேண்டும் எனவும், ஜனநாயக ரீதியிலான கடமையை செய்யும் போது முதல்வர் தம்மை பாராட்டி இருக்க வேண்டும், ஆனால் தம் மீது பொய் வழக்குப் போட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கள்ள ஓட்ட திமுக நபர் 20 நாட்கள் மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு நேற்று தான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் எனவும், இது போன்ற ஒரு காரியத்திற்கு ஸ்டாலின் துணை போனது வேதனையான விஷயம் எனவும், தான் சிறையில் இருந்த போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தம்மை சந்தித்து ஆறுதல் கூறினர் எனவும், அமைப்பாளர்கள் பாஜகவின் அண்ணாமலை, தமாகவின் ஜிகே வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர் எனவும், அவர்களுக்கெல்லாம் நன்றி எனவும் தெரிவித்தார்.
கருணாநிதி காலத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவை அழிக்க முடியவில்லை மாறாக 2011-இல் மாபெரும் இயக்கமாக உருவானது அதேபோல எத்தனை கருணாநிதி வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது எனவும், அதே போல எத்தனை ஸ்டாலின் வந்தாலும் ஹிட்லர், முசோலினி அவதாரம் தான் ஸ்டாலின் எனவும். அவர் எடுத்தாலும் கூட இந்த இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது எனவும் ஐபிசியில் உள்ள அனைத்து பிரிவுகளும் தம்மீது போடப்பட்டுள்ளது எனவும், தம்மை தீவிரவாதிகளை அடைக்கும் பூந்தமல்லி கிளையில் அடைத்ததாகவும், 20 நாட்களாக புழல் சிறையில் இருந்தும் உயர்நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியும், சிறை நிர்வாகம் நேற்று வெளியில் விடவில்லை என்றும், 7 மணிக்கு பிணை ஆணை வந்தும் கூட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தம்மை வெளியில் விடவில்லை என்றும், அதிமுகவின் எழுச்சியை ஸ்டாலினால் தடுக்க முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசின் உத்தரவை மதித்த சிறை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu