ஸ்ரீதேவி நாகசக்தி கருமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா

ஸ்ரீதேவி நாகசக்தி கருமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா
X
முதல் படம் அலங்கரிக்கப்பட்ட தேவி நாகசக்தி கருமாரியம்மன், (அடுத்த படம்) விரதம் இருந்து காப்பு கட்டி பக்தர்கள் தீ மிதித்தனர்.
செங்குன்றம் அருகே ஸ்ரீதேவி நாகசக்தி கருமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழாவில் காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.

செங்குன்றம் திருவிக தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி நாகசக்தி கருமாரியம்மன் ஆலயத்தில் 15-ம் ஆண்டு ஆடிமாத 7-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி திருவிக தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி நாகசக்தி கருமாரியம்மன் ஆலயத்தில் 15-ம் ஆண்டு ஆடிமாத 7-ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய கோயில் காளை நண்பர்கள் மற்றும் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பந்தகால்நடுதல், கூழ்வார்த்தல், விளக்குபூஜை, பால்குடம் எடுத்தல், பூச்சொறிதல், கங்கைதிரட்டுதல், காப்புகட்டுதல், அக்கினி கப்பறைஎடுத்தல், பால்காவடிஎடுத்தல் மற்றும் அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காப்புகட்டிய பக்தர்கள் தீகுண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திகடனை பூர்த்தி செய்தனர்.

இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பொங்கல் வைத்து அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!