மாதவரம் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மாதவரம் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய மஹா கும்பாபிஷேகம்
X

கந்தன்சாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்னோத்தாரன நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா.

மாதவரம் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

மாதவரம் அருகே சென்னை கருணாநிதி சோழன் நகர் 182-வது வட்டம் கந்தன்சாவடியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்னோத்தாரன நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா சென்னை புறநகர் மாவட்டகழக அதிமுக செயலாளரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலருமானகே.பி.கந்தன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

182-வது வார்டு மாமன்ற அதிமுக உறுப்பினர் சதீஷ்குமார் முன்னிலையில் விக்னேஷ்வரபூஜை, அனுக்ஞை, சங்கல்பம், கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், புதியபிம்பம் கரிவலம் வருதல், கோபூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, ரஷோக்ண ஹோமம், மிருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம் மற்றும் முதல் நான்கு கால யாகசாலை போன்ற சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ள கலசநீரை மேளதாளத்துடன் ஆலயத்தை சுற்றிவந்து வேதமந்திரங்கள் முழங்க விமானம் மற்றும் மூலவர் ஸ்ரீ முத்துமாரியம்மன்,பரிவார தெய்வகளுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதணைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இதில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் தலைவர் பொன்.பாஸ்கரன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குத்துச்சண்டை கழகம் தலைவர் பிரபுவெங்கடேஸ்வரா, நெல்லைநாடார் பள்ளியின் தாளாளர் ராஜ்குமார், சமூக சேவகர் சுரேஷ், செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் சசிகுமார், ஜோதிடர் லதாபிரபு சுற்றுவட்டார பக்தர்கள் உள்ளிட்ட கிராமபொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆன்மீக சிந்தனையாளர் சபீனாபாஸ்கரன் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்.

நிர்வாக குழு நிர்வாகிகள் தலைவர் வேலு , செயலாளர் அருணாச்சலம் , தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் மோகன், பொருலாளர் ஆறுமுகம் துணைத்தலைவர் ஜெயபாலன், துணை செயலாளர்கள் யோகேஷ்வரன், புருஷோத்தமன், துணை பொருலாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது