பேரிடர் காலங்களிலில் சிறப்பாக சேவை புரிந்தவருக்கு சேவை சுடர் விருது

பேரிடர் காலங்களிலில் சிறப்பாக சேவை புரிந்தவருக்கு சேவை சுடர் விருது
X

பேரிடர் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்தவருக்கு சேவை சுடர் விருது வழங்கப்பட்டது.

பேரிடர் காலங்களிலில் சிறப்பாக சேவை புரிந்தவருக்கு சேவை சுடர் விருது வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் கன்னி செட்டியார் திருமண மண்டபத்தில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு மற்றும் ரெட்ஹில்ஸ் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு சேவைசுடர் விருது உள்ளிட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அறக்கட்டளையின் நிறுவனர் அப்துல்காதர் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய மனித நலன் உரிமைகள் அமைப்பு மாநில செயலாளர் ஜோதி, டாக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் மக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்த ஸ்ரீஆண்டாள் அறக்கட்டளையின் பொது செயலாளரும் பாடியநல்லூர் சிவன் கோயில் நிர்வாக செயலாளருமான சரவணனுக்கு சிறந்த சேவைக்கான சேவை சுடர் விருதினை வழங்கினர்.பின்னர் விருது பெற்ற சரவணனை ஸ்ரீ ஆண்டாள் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவன் கோயில் பொறுப்பாளர்கள், சமூக சேவகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!