செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

செங்குன்றம் நாரவாரிகுப்பம்  பேரூராட்சி கவுன்சிலர்கள்  கூட்டம்
X

நாரவாரிக்குப்பம் தேர்வுநிலை பேரூராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழரசிகுமார் தலைமையில் நடை பெற்றது. 

பேரூராட்சிக்கு 8 எண்ணிக்கை உள்ள மின்கலம் மூலம் இயங்கும் வாகனம் கொள்முதல் செய்து கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் நாரவாரிக்குப்பம் தேர்வுநிலை பேரூராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி மன்ற கூடத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழரசிகுமார் தலைமையில் நடை பெற்றது. துணை தலைவர் விப்ர நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் வளர்ந்துள்ள கருவல மரங்களை அகற்ற வேண்டியும், லட்சுமிஅம்மன் கோயில் தெரு நுழைவு வாயலில் உள்ள கால்வாயில் மழைநீர் தேங்காமல் இருக்க புதிய சிறுபாலம் அமைத்து தரவேண்டியும் மற்றும் பேரூராட்சிக்கு 8 எண்ணிக்கை உள்ள மின்கலம் மூலம் இயங்கும் வாகனம் கொள்முதல் செய்துகொள்ள நிர்வாக அனுமதி வழங்கிவுள்ளது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நாரவாரிகுப்பம் பேரூராட்சி மன்றத்தால் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பப்பிதாபால்ராஜ், லதாகணேசன், சகாதேவன், கார்த்திக்கோட்டீஸ்வரன், தெய்வானைகபிலன், லிலாவதிசாந்தகுமார், அமுதாஆசைதம்பி, வினோதினிபாலாஜி, ரமேஷ், கோமதிபாஸ்கர், ஸ்ரீதேவிதேவராஜ், மோகன், கலைவாணி, ராதாகிருஷ்ணன், இளங்கோவன், கோதண்டராமன் உள்ளிட்ட பேரூராட்சி, ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!